குந்தவை ராஜ்ஜியம் 4
இதற்கு முந்தைய தொடரை காண இங்கே <<கிளக்>> செய்யுங்கள்...பழனிவேல் மாறன் தன் மகனை எழில்ரசனை விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வர சொல்லிவிட்டு, சிவகந்தனை அழைத்துகொண்டு கோட்டையின் கிழக்கு பகுதியில் இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்றான் செல்லும் வழியில்
இரு அடுக்கு மிகப் பெரிய பரந்த சத்திரமாக காட்சி அளிக்கும், சுந்திர சோழர் வைத்தியசாலை நோக்கி நடக்க அரம்பித்தான் சிவகந்தன், அவரது தீடீர் விஜயத்தை கண்டு அங்கு உள்ள பணியாளர்களில் ஒருவன் தலைமை வைத்தியர் பாலகுமரன் பிள்ளைவாள் அழைத்து வர சென்றுவிட்டார். அங்கு உள்ள பணியாளர்கள் சிவகந்தனையும், பழனிவேல் மாறனையும், மரியாதையுடன் உள்ளே அழைத்து சென்று ஆசனத்தில் அமர வைத்தனர். சிவகந்தன் வருகையை அறிந்து விரைவாக வந்த தலைமை வைத்தியர் பாலகுமரன்,
"தங்கள் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அய்யனே, தங்கள் வரவு நல்வரவாகட்டும்,"
"மிக்க நன்றி" என்று கூறிவிட்டு சிறிய புன்னகை தலைமை வைத்தியரை நோக்கி உதிர்த்தார் சிவகந்தன்.
[வாசகர்களுக்கு ஒரு விஷயத்தை பகர்ந்துகொள்ள விரும்புகிறேன், சுந்திர சோழரின் ஆட்சி காலத்தில் தன் இளம் வயதிலே, அவரது மகள் குந்தவை பிராட்டி சோழதேச மக்கள் நோய் நொடியின்றி வாழ, சோழ தேசம் முழுவதும் வைத்தியசாலை நிறுவி தனது கட்டுபாட்டில் வைத்து இருந்தார், இதை அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த உத்தம சோழர் காலத்திலும், தனது தம்பி ராஜராஜசோழ காலத்திலும் அவரது மகன் காலத்திலும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது, பல அரிய வகை மூலிகை வெளி தேசத்தில் இருந்து சேகரித்து சோழ தேசத்து மக்கள் நலமுடன் வாழ பாடுபட்டார் என்பது கூறிப்பிடக்கது. இன்று வரை வரலாற்று அசிரியர்கள் பாராட்டும் ஒரே ஒரு சோழ இளவரசி குந்தவைபிராட்டி என்பது கூறிப்பிடக்கது.]
"அய்யனே, நமது இளவரசியின் உதவியால் இந்த வைத்திமசாலை அனைத்து வகையான மூலிகைகள் முதல் வைத்தியத்தில் கை வண்ணம் காட்டும் சேர தேசத்து வைத்தியர்கள் வரை நமது வைத்தியசாலையில் பணியாற்றுவது பெருமைக்கூரியது, தற்பொது இளவரசியின் உதவியால் இன்று சீனதேசத்து புதுவிதமான வைத்திய முறையும் கற்றும், செயல்படுத்தியும் வருகிறோம், தாங்கள் நாடினால் எங்களுக்கு மேலும் ஒரு புதிய வைத்தியமுறை கற்க முடியும். அதன் மூலம் இந்த காஞ்சி நகர மக்கள நோய் நொடி இன்றா வாழ முடியும் அய்யனே"
"வைத்தியரே தங்களுக்கு உதவி செய்ய கடமைபட்டு இருக்கிறேன், தங்கள் எந்த வைத்தியத்தை கற்க விரும்புகிறீர்கள்?"
"சென்ற வாரம் மாமல்லபுரத்தில் அரபு தேசத்தில் இருந்து இரு வணிக கப்பல் வியாபாரம் செய்ய வந்துள்ளது, அதில் அரபுலகத்தில் தலை சிறந்த ஒரு வைத்தியரும் வந்துள்ளார், அவரிடம் சில அரபுலக வைத்தியத்தின் ரகசியங்களை கற்று கொண்டால் சிறப்பாக இருக்கும். அய்யனே தாங்கள் நினைத்தால் நடக்கும்,"
"வைத்தியரே, தாங்கள் அறீவீர்கள் என்று நினைக்கிறேன், இதே இந்த காஞ்சி நகரில் பிறந்த பல்லவ இளவரசன் சீனா சென்று, அங்கு உள்ள கொடிய நோயை அழித்து சீனர்களை காபாற்றினான் என்று சீன வணிகர்கள் பலர் கூறியதை நான் கேட்டு இருக்கிறேன், அந்த இளவரசனை போன்று பல திறமையான வைத்தியர்களும் சித்தர்களும் வாழ்ந்த பூமி இது, அவர்கள் நமக்கு விட்டு சென்ற வைத்திய குறிப்புகள் கொண்ட ஒலை சுவடிகளை தேடி கற்றாலே போதும், நம் மக்களை நோய் இன்றி வாழ வைக்கலாம் சோழ தேசத்தை வைத்தியரே."
தலைமை வைத்தியரால் பேச முடியவில்லை தலையை மட்டும் ஆட்டி கொண்டு ஒப்பு கொண்டார் மன வருத்துடன்,
இதை உணர்ந்த சிவகந்தன், "வைத்தியரே தங்களுக்காக பேசி பார்க்கிறேன் அரபு வைத்தியரிடம், ஆனால் அரபியர்கள் வலிமையானவர், மூர்க்கமானவர்கள் அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ங்கள், அதற்கான ஏற்பாட்டை செய்ய முயற்ச்சிக்கிறேன்."
இதை கேட்ட சந்தோசத்தில் தலைமை வைத்தியர் பாலகுமாரன் மகிழ்ச்சியுடன் "மிக்க நன்றி அய்யனே, தங்கள் உதவியை மறக்க மாட்டேன்".
அந்த நேரத்தில் புகழேந்தி வைத்தியசாலைக்கு நுழைந்து சிவகந்தனுக்கும், பழனிவேல்மாறனக்கும் பணிவான வணக்கம் செலுத்திய பின், "தளபதி அவர்களே, மாளிகையில் தலைமை சிற்பி எழிலரசன் அவர்கள் காத்து இருக்கிறார் என்ற தகவலை, உங்கள் மகன் மணிமாறன் சொல்லி அழைத்து வரசொன்னார்."
ஆசனத்தில் இருந்து சிவகந்தனும், பழனிவேல்மாறனும் எழுந்து, மாடமாளிகையை நோக்கி செல்ல அரம்பித்தனர் வேகமாக.