வெள்ளி, 13 செப்டம்பர், 2013

குந்தவை ராஜ்ஜியம் நாவலை பற்றிய விளக்கம்

குந்தவை ராஜ்ஜியம் நாவலை பற்றிய   விளக்கம் 

இந்த நாவலின் கதை களமாக சோழ தேசத்தில் இருந்து தூதவன் தன் மன்னருக்கு தூது செய்தி கொண்டும் செல்லும் பயணத்தில், அவனது நினைவுகள் கடந்த காலத்தில் ஒரு பெண்னின் வாழ்கையை நோக்கி பயணிப்பதாக எழுதி இருக்கிறேன்.
அந்த தூதவனின் பெயர் சிவகந்தன், இவன் சோழ தேசத்து மருமகன் வல்லத்து இளவரசன் வல்வராயனின் வந்திய தேவனின் நம்பிக்கைகூரிய ஒற்றன். மட்டும் அல்லாமல் வளர்ப்பு மகனாக வந்திய தேவர் குந்தவைபிராட்டிமின் தம்பதிக்கு இருந்தான்.
சிவகந்தன்..


சிவகந்தன் நினைவில் பயணித்த பெண், சோழ தேசத்து குலதெய்வமாக போற்றிய குந்தவைபிராட்டியார் தான், சுந்திர சோழின் ஒரே மகளான இவளது சகோதரன் தான் ராஜராஜ சோழன்.
ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் குந்தவையின் வளர்ப்பில் வளர்ந்தான் என்பது கூறிப்பிடக்கது.
சோழ தேசத்து அரசர்களை உருவாக்கும் பெண்ணாக மட்டும் இல்லாமல், சோழ தேசத்து மக்கள் வாழ்வில் கலந்தவள் அவர்களை நோய்களை போக்க எல்லா ஊருகளுலும் மருத்துவமனை உருவாக்கியவள், எல்லா மதங்களை பாதுகாப்பு அரணாக இருந்து மட்டும் அல்லாமல் வைணவம் புத்த மதங்களுக்கு கோயில் கட்டியவள். ராஜராஜசோழனின் நிர்வாகத்தை கண்காணித்தவள், அது மட்டும் அல்ல ராஜேந்திர சோழனை ராஜ கலை கற்று கொடுத்தவள்.
மொத்தில் பண்டைய இந்தியாவில் வலிமையான பெண்களில் ஒருவராக கருதபட்ட குந்தவைபிராட்டியாரை பற்றி வாழ்கை சம்பவங்களை சிவகந்தன் நினைவுகள் முலம் இந்த நாவலில் வெளிபடுத்த இருக்கிறேன்.
அந்த பெண்னின் ராஜ்ஜியமான குந்தவை ராஜ்ஜியமே இந்த நாவலின் தலைப்பாக வைக்கிறேன்..




ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

குந்தவை ராஜ்ஜியம். [அறிமுகம்]


குந்தவை ராஜ்ஜியம்.

(சோழ இளவரசியின் வரலாறு.) 


முன்னுரை
இறைவன் திருப்பெயர் கொண்டு அரம்பம் செய்கிறேன்.

நான் எழுதும் முதல் வரலாற்று கன்னி நாவலில். கதையின் நாயகனாக ஒரு பெண்னை வைத்து எழுத அவல். அதுவும் ஒரு தமிழ் குல பெண்னின் சாகசங்களை பதிவு செய்து எழுதவே இந்த நாவலை எழுதுகிறேன்.

நமது தேசத்தை ஆண்ட முதல் பெண்.

இந்தியாவை ஆண்ட பெண்கள் மிகவும் குறைவு. நமது தேசத்தை ஆண்ட முதல் பெண் வேற தேசத்தை சேர்ந்த முஸ்லிம் பெண், அதுவும் 13 ம் நூற்றாண்டில் தான் நிகழ்ந்து. மற்றபடி நமது தேசத்தில் பிறந்து ஆண்ட பெண் அரசிகளை காண்பது அரிது. ஆனால் 10ம் நூற்றாண்டில் பிறந்த ஒரு சோழ இளவரசி, கடல் கடந்து பரந்து விரிந்த தேசத்தை தனது கட்டுபாட்டில் வைத்து இருந்தார் என்றால் நம்ம முடிகிறதா? அந்த பெண் யார் என்று தெரியுமா?

தொடித்தோட்டசெம்பியன், இளஞ்சேட் சென்னி, கரிகாலன், கிள்ளிவளவன், நலங்கிள்ளி, மாவளத்தான், பெருநற்கிள்ளி, செங்கண்ணான் ஆண்ட பரந்து விரிந்து இருந்த சோழ தேசம், பல்லவர்கள், பாண்டியர்கள், சேரர்கள் வலிமையால் வலிமை குன்றி சிற்றரசாக வாழ்ந்த காலம்.

ஏழாம் நூற்றாண்டில் மாமல்லன் என்ற அழைக்கபட்ட நரசிம்மபல்லவனிடம் கப்பம் கட்டிம் சிற்றரசாக இருந்த சோழ தேசத்திற்கு.

காவேரிகரையில் இருந்து நர்மதாவரை இருந்த பரந்த விரிந்து இருந்த பல்லவ தேசத்தை ஆட்சி செய்த நரசிம்மபல்வரின் செல்ல மகள் குந்தவையின் மனதை ஏன்று விக்கிரம் சோழன் கவர்தானோ அன்றே, சோழ தேசம் செழிக்க அரம்பித்துவிட்டது.

பார்த்திப சோழனின் மகனான விக்கிரமனை கரம் பிடித்து ஏற்ற குந்தவையின் வம்சத்தில் 300 வருடங்களுக்கு பிறகு அதே குந்தவையின் பெயரிலே சுந்திர சோழரின் ஒரே மகளாக பிறந்த குந்தவைபிராத்தியை பற்றிய வரலாற்றை பதிவு செய்வே இந்த நாவலை எழுத அரம்பித்தேன்.

இரு இதிகாசங்களில் ஒன்றான மகாபாரத்தில் பாண்டவர்களின் தாயான குந்தி ஈன்ற மகன்களோ நான்கு., அந்த நான்கு சிறப்பு பெற்ற மகன்களான கர்னன், தர்மர், பீமன் மற்றும் ஆர்ஜுனை போல, அதே குந்தியின் மறுபெயரை கொண்ட குந்தவை, சோழ தேசத்தை வளப்படுத்திய நான்கு சோழர்களான சுந்தர சோழர், உத்தம சோழர், ராஜராஜ சோழர், மற்றும் ராஜேந்திர சோழர் ஆட்சியில் பக்கபலமாக இருந்தார்,



உலக புகழ் பெற்ற ராஜராஜ சோழரை மிகசிறந்த மன்னராக மாற்றிய இவர் தான் அவரது மகன் கடல் கடந்து பல தேசங்களை வென்ற ராஜேந்திர சோழனை வளர்த்தவர். ராஜராஜனின் அன்பு தாயாக, ஆசானாக இருந்த தமைக்கையே குந்தவை.



மணியன் வரைந்த குந்தவை ஓவியம்
அவளது வரலாறே

"குந்தவை ராஜ்ஜியம்"

இந்த நாவலை எழுதுவதற்கு காரணமான சகோதரர் பிருத்விராஜ் மற்றும் அரவிந்து அவர்களை நினைவு கூறுகிறேன்.

சோழர்களை பற்றி பல தகவல் நான் அறிவதற்கு காரணமான (பொன்னியன் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற பல நாவல்களை எழுதிய)அமரர் கல்கி, (உடையார் நாவலை எழுதிய)பாலகுமாரன், கலைமாமணி விக்கிரமன் போன்ற ஆசிரியர்களுக்கு சமர்பிக்கிறேன்...

குந்தவை ராஜ்ஜியம் ஆசிரியர்
ரஹ்மான்./...