திங்கள், 28 ஏப்ரல், 2014

குந்தவை ராஜ்ஜியம் 3

குந்தவை ராஜ்ஜியம் 3


இதற்கு முந்தைய தொடரை காண இங்கே <<கிளக்>> செய்யுங்கள்...

புரவியில் வருபவரை தொலைநோக்கியில் மூலம் அறிந்த மணிமாறன், அவரை வரவேற்கக கோட்டை வாயிலை நோக்கி விரைந்தை கண்ட புகழேந்தி,

"புரவியில் வருபவர் யார் மணிமாறா?"

"புயல் காற்றை போன்று வேகமாக புரவியில் வருபவரை அறியவில்லையா நீ?, வருபவர் வல்லவராய வந்திய தேவனின் அஸ்தான தளபதி சிவகந்தன் வருகிறார், நான் அவரை வரவேற்க்க கோட்டை வாயிலை தயார்படுத்திகறேன், நீ என் தந்தை அழைத்து வா  கோட்டை வாயிலுக்கு, சீக்கிரமா கிளம்பு புகழ்,"

கோட்டையை நோக்கி வேகமாக சிவகந்தன் விரைந்தான், அவனை வரவேற்க்க கோட்டை வாயிலில் வீரர்களும் இருபுறமும் அணிவகுத்து நிற்பதையும், அவர்களை தலைமை தாங்கும் விதமாக காஞ்சி படை தளபதி பழனிவேல் ராஜன் கம்பிரமாக நிற்பதை கண்டான் சிவகந்தன்.  கோட்டை வாயிலை நோக்கி தன் வெண்புரவியை செலுத்தினான் சிவகந்தன்.

வேகமாக செலுத்திய புரவியை  காஞ்சி படைதளபதி பழனிவேல் ராஜன் முன் தன் புரவியின் கடிவாளத்தை இழுக்க, அந்த அழகான வெண் புரவி, தன் இரு முன்னங் கால்களையும் வான் நோக்கி  சில நோடிகள் உதைத்து விட்டு பூமியை நோக்கி தன் கால் பதித்தது,

சிவகந்தனை வரவேற்கும் வகையில், இரு அணியாக நின்று கொண்டு இருந்த சோழ வீரர்கள், தங்கள் கேடயத்தையும்,  வேலையும் ஒங்கி தட்டி அதன் முலம் வந்த பலமான ஒசையை தாளமாக மாற்றி "சோழம், சோழம், சோழம்," என மூன்று முறை கூவி, உற்சாகமாக வரவேற்றனர்.

சோழ வீரர்களின் வரவேற்பை ஏற்று கொண்ட வகையில் தன் வலது கைகளை உயர்த்தி, தன் மார்பில் வைத்து சைகையால் அவர்கள் வரவேற்பை ஏற்று கொண்டதாக காட்டிவிட்டது, புரவிக்கு விட்டு ஒரே பாய்ச்சலாக கீழே குதித்து கீழே இறங்கினான்.

தன் முன் நின்ற சிவகந்தன் கரங்களை பற்றி, "மக்களின் வேந்தனாக இருக்கும் வந்தியதேவரின் நம்பிக்கை பாத்திரமானவரே, தங்கள் வருகை நல்வரவாகட்டும், அங்கு வந்திய தேவரும், எங்கள் தாய் குந்தவைபிராட்டியும் நலமா?"

"நீங்களே அறிந்தீர்பீர்களே பழனிவேல் ராஜன் அவர்களே, எனது தாய் ஆறு மாதங்களாக உடல் நலம் இன்றி தவிக்கிறார்கள், தற்பொழுது அவர்கள் உடல் நிலை..." என்று சொல்லி முடிப்பதற்குள் வார்த்தைகள் உடைந்து கண்களின் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது.
புன்கை தவிழும் முகத்தையும், கோபத்தையும் மட்டும் வெளிகாட்டி வந்த சிவகந்தனின் முகம், இன்று குழந்தை போல் கேவி கேவி அழுவதை கண்டு, ஒரு கணம் பழனிவேல் ராஜன் அரண்டு தான் போனார்.

"மண்ணித்து விடுங்கள் அய்யனே, தங்களுக்கு மட்டும் அல்ல,  சோழ தேசம் நமது குலதெய்வம் குந்தைவைபிராட்டியை உடல் நிலையை நினைத்து தான் கவலைபடுகிறது, அய்யா தங்கள் வருகையின் நோக்கத்தை அறிந்துகொள்ளலாமா?"

தன் கண்களின் இருந்து வரும் கண்ணீரை துடைத்து கொண்டு, "எனது தந்தை நமது மன்னர் ராஜேந்திர சோழரிடம் முக்கிய தகவலை சொல்லுவதற்காக என்னை அனுப்பி இருக்கிறார், நாளை மறுநாள் சீன தேசத்தை நோக்கி செல்லும் நமது வணிக கப்பலில் பயணித்து மலேயா தீவில் இருக்கும் இராஜேந்திர சோழரை சந்திக்க செல்லுகிறேன். என் பிராயனத்தை  தயார்படுத்தி கொள்ளவதற்காக இங்கு வந்துள்ளேன், அது மட்டும் அல்ல, உங்களிடம் ஒரு முக்கிய பொறுப்பை ஒப்படைக்க வந்துள்ளேன்."

இதை கேட்ட மணிமாறன், முளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அரம்பித்து, எப்படியாவது சிவகந்தன் முலமாக மலேயா(மலேசியா) தீவில் இருக்கும் சோழ படைகளுடன் இனைந்துகொள்ளும் வாய்பை நழுவ விடக்கூடாது என திட்டம் தீட்டிக் கொண்டான்.

"தங்கள் பிராயான களைப்பில் இருப்பீர்கள், வெயிலின் உஷ்னம் வேற அனலாக இருக்கிறது, தங்கள் தனிக்க மோர் அருந்துங்கள், உங்களுக்கு மதிய விருந்தை எனது வீட்டில் தயார்படுத்த சொல்லிவிட்டேன், தங்களுக்கு பிடித்த அசைவ விருந்தை ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டேன்."

சிவகந்தன் முன் பணிவுடன் மண் சட்டி நிறைய வெண் நிற பசு மோரை நீட்டிய மணிமாறனிடம் வாங்கி ஒரு மூச்சியில் முழுமையாக குடித்துவிட்டான், தன் தாகம் தனிந்த பின்.

"பழனிமாறன் அவர்களே என்னை மண்ணிக்க வேண்டுகிறேன், கடந்த அறு மாதங்களாக நான் ஆசைவ உணவுகளை உண்ணுவது இல்லை, தங்கள் விருந்தை என்னால் ஏற்று கொள்ள இயலாது, தங்கள் சாதராண உணவை ஏற்பாடு செய்யுங்கள்."

"அப்படியே ஆகத்தும், வருங்கள் அய்யனே, கோட்டைக்குள் செல்வோம், தங்கள் களைப்பு தீர சிறிது நேரம் ஒய்வு எடுத்துக்கொள்ங்கள், உங்கள் பயணம் லேசாக இருக்க உதவும்."

"ஆம், நீங்கள் சொல்வது சரி தான், என் புரவியும் களைப்பு தீரவேண்டும், அதற்கு தேவையான ஆகாரத்தை வழங்க ஏற்பாடு செய்யுங்கள், நாம் கோட்டைக்கு செல்வோம்"

கோட்டைக்குள் சிவகந்தன் நுழைந்த பொழுது கோட்டை மத்தியில் இருக்கும் ஆத்திய கரிகாலன்(அதித்தய கரிகாலன் சுந்திர சோழனின் முத்த மகன், இளவரசி குந்தவைபிராட்டிக்கும், ராஜராஜ சோழனுக்கும் அண்ணன் ஆவர், பாண்டிய அபத்துவிகளால் இளம் வயதிலே கொல்லப்பட்டார்.) கட்டிய பொன் அரண்மனைய சூரிய ஒளி பட்டு கண்களை கூசும் ஒளி சிவகந்தன் கண்களை தாக்கியது,
பொன்னியன் செல்வன் நாவலில் மணியன்  அதித்தய கரிகாலன் ஓவியம்..

இதைகண்ட பழனிவேல் ராஜன்,"என் அய்யனே. பார்த்தீரா, நமது மாமன்னர் ராஜேந்திர சோழர் நாடு திரும்பிய பின்பு இக்கோட்டையில் தான் வசிக்க போகிறார், தனது பெரிய தந்தை ஆத்திய கரிகாலன் ஆசையாக கட்டி வாழ்ந்த  இக்கோட்டையில் தான் வசிக்க போகிறார், இராஜேந்திர சோழன் அப்படிய அத்திய கரிகாலனின் மறுபிறவி என்றே கூறலாம், அவரிடம் இராஜராஜ சோழன் குணங்களை காணவே முடியாது." என்று பெருமையாக பழனிவேல் ராஜன் கூறி கர்வத்துடன் சிரித்தார்.

"ஹும்ம்ம், அத்திய கரிகாலன் கட்டிய அரண்மனைக்கும் தற்போதைய அரண்மனைக்கு பல மாற்றங்கள் இருக்கிறதே,  கோபுரங்கள் அழகாக வடிவமைக்கப்படுள்ளதே, இதை யார் புதுப்பித்தார்கள்?".


"வடிவமைத்தது வேறு யாரும் இல்லை, குச்சரமல்லரிடம் வலது கரமாக திகழந்த எழில்அரசன் தான். இதை வடிவமைத்தார்."
(உலகம் போற்றும் தச்சை பெரிய கோயிலை வடிவமைத்து கட்டியவர் தான்.  குச்சரமல்லர் என்பதை வாசகர்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..)

"சரி, எழில்ரசனை அழைத்து வாருங்கள், உங்கள் இருவருக்கும் என் தாய் குந்தைவைபிராட்டியிடம் இருந்து முக்கிய செய்தி கொண்டு வந்துள்ளேன். உங்கள் இருவரிடம் அத்தகவலை தெரிவிக்கவே, என் தொலைதூர பிராயாணத்தை பொருட்படுத்தாமல் இங்கு வந்தேன்."

பழனிவேல் ராஜனுக்கு சிறிய அதிர்ச்சி, சிவகந்தன் வரும் பொழுதே தமக்கு ஒரு செய்தி இருப்பதை தெரிவித்தும், அதை பொருட்படுத்தாமல் அவரை வரவேற்பதில் அவர் சொல்லவந்ததை செவி வழியில் கேட்காமல் விட்டதை என்னிய அதிர்ச்சியை வெளிகாட்டாமல், மணிமாறனிடம்,"சீக்கிரம் அழைத்து வா, தலைமை சிற்பி எழில்ரசனை பணிவுடன் அழைத்துவா, குந்தவைபிராட்டியிடம் இருந்து செய்தி வந்து இருப்பதை தெரிவித்து அழைத்துவா, சீக்கிரம்."
மணிமாறன் வேகமாக தலைமை சீற்பி இருக்கும் மாடமாளிகைக்கு விரைந்தான்.

[குந்தவைபிராட்டியிடம் இருந்து வந்திருக்கும் தகவல் கேட்டால் பழனிவேல் ராஜனும், எழில் அரசனும் அதிர்ச்சி அடைய போகிறார்கள், அப்படி என்ன செய்தி கொண்டு வந்து இருக்கிறார் சிவகந்தன், என்பதை ஏழு நாள் வரை காத்திருங்கள்.]

பயணம் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக