திங்கள், 9 ஜூன், 2014

குந்தவை ராஜ்ஜியம் 6

குந்தவை ராஜ்ஜியம் 6


சிறு வயதில் சிதம்பரத்தில் தில்லை நடராஜர் முன் நாட்டியம் அடி வந்த பஞ்சவன் மகாதேவியின் நாட்டியத்திலும், அவள் அழகிலும், என் அவள் அழகில் மயங்கிய ராஜராஜ சோழன், தாசியாக இருந்த அவளை துணைவியாக்கி கொண்டான். மணைவியாக மட்டும் அல்லாமல் ராஜராஜனுக்கு ராஜதந்திரியாகவும் விளங்கினாள்,
தன் கணவரின் முதல் தாரத்து மகனான ராஜேந்திர சோழனை தன் ஒரே மகனாக பாவித்தால், கடைசி வரை தன் வயிற்றில் கருவை சுமக்க அனுமதிக்கவில்லை, ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கா வாழ்ந்தவள்,
ராஜேந்திர சோழன் தன் தாய்க்கு கூட கோயில் கட்டவில்லை, தன்னை வளர்த்த தாய் பஞ்சவன்மகாதேவி மட்டும் கோயில் எழுப்பினார் என்பது வரலாறு.
ராஜேந்திர சோழனை புகழ் பெற்ற மன்னாக்க காரணமான இரு பெண்களில் பஞ்சவன்மகாதேவியும் ஒருவர்.

பட்டாடை உடுத்தி ராஜராஜ சோழனோடு சேர்ந்து கம்பிரமாக சோழ தேசத்தை ஆட்சி செய்தவள், இன்று வெண்நிற ஆடை உடுத்தியும், குங்குமம் இட்ட நெற்றியில் விபூதி பூசியவளாக இறைவன் திருவடியில் சேவை செய்து பக்தி பழமாக மாறிவிட்டாள்.
காஞ்சி அரண்மனை தோட்டதில் இருக்கும் சிறிய சிவன் கோயில் கருவறை வாசலில் அமர்ந்து திருநாவுகரசர் இயற்றிய வெண்பா ஒலை சுவடியை மெய்மறந்து பாடி கொண்டு இருந்தார்.

படை தளபதி பழனிவேல் மாறனின் மகன் மணிமாறன் சிவகந்தன் வந்த தகவலை மகாதேவி பஞ்சவன்மகாதேவி சொல்வதற்காக காத்து இருந்தான்.
இறைவனின் புகழ்பாடல்களை லயத்து பாடி கொண்டு இருந்தவள், மணிமாறன் கைகட்டு எதோ செய்தி சொல்ல வந்து இருக்கிறான் என்பதை யூகித்தவள், பாடல்களை பாடுவதை நிறுத்திவிட்டு அவனை தன் அருகில் வரும் படி கைகளை ஆசைத்து அருகில் வரும்படி சைகை செய்தாள், அருகில் வந்து சிவகந்தன் வந்து இருக்கும் தகவலையும், வந்த காரணத்தையும், தங்கள் சந்திக்க அனுமதிக்கா சிவகந்தன் காத்து இருப்பதையும் கூறினான்.

*எனக்கு தோன்றாத இவ்விடயம் குந்தவைக்கு மற்றும் தோன்றியது எப்படி? என் இருந்தாலும் தாயான என்னை விட, அத்தையான குந்தவைக்கே ராஜேந்திர சோழனின் மீது எவ்வளவு அக்கறை, என்ன இருந்தாலும் குந்தவை, குந்தவை தான்,* என்ற எண்ணியவாறே, பணியாளை அழைத்து ஒலைச்சுவடி தயார் செய்யும் படி உத்திரவிட்டாள்.
"மணிமாறா! சிவகந்தன் இப்பொழுது எங்கே இருக்கிறார்?"
"தாயே, அவர் வடக்ககே உள்ள விருந்தினர்கள் இருக்கும் மாடமாளிகையில் இருக்கிறார், தங்கள் அனுமதிக்கா காத்து இருக்கிறார், தங்களை அவர் எப்போது காண வரலாம் தாயே?"
"இப்பொழுதே சிவகந்தனை காண நானே வருகிறேன்,"

"தாயே தாங்கள் எப்படி? நீங்கள் வர வேண்டிய அவசியம் இல்லை தாயே, சிவகந்தன் அய்யனை வர சொல்லுகிறேன் தாயே."
"இல்லை மகனே, இல்லை, இந்த உயிர் சோழ தேசத்தின் நலனுக்காகவும், என் மகன் ராஜேந்திர சோழனுக்காக தான், என் உயிர் இந்த உடலில் தங்கி இருக்கிறது, அன்றே என் மணவாளன் ராஜராஜ சோழன் இறந்த அன்றே, அவருடன் மற்ற மனைவிமார்கள் போல ஆக்னியில் பிரவேசித்து இருப்பேன், என் அக்கா உலகமாகதேவியின் கட்டளைக்காக தான் இந்த உயிர் இன்னும் இந்த உடலில் தங்கி இருக்கிறது. என் மகன் நலனுக்கா வந்து இருக்கும் சிவகந்தனை நானே போய் சந்திப்பது தான் நல்லது" என்று கூறி தான் பயணிக்கும் பல்லக்கை நோக்கி விரைந்தாள். அவளை பின் தொடர்ந்தான் மணிமாறன்.


to be continued....

update now sixth version..

திங்கள், 2 ஜூன், 2014

குந்தவை ராஜ்ஜியம் 5

குந்தவை ராஜ்ஜியம் 5

இதற்கு முந்தைய தொடரை காண இங்கே <<கிளக்>> செய்யுங்கள்...

சிவகந்தனையும், பழனிவேல்ராஜனையும் அழைத்து கொண்டு மாடமாளிகை நோக்கி விரைந்தான் புகழேந்தி, அங்கு தலைமை சிற்பி எழில்ரசன் அரியனையில் அமர்ந்து காத்துகொண்டு இருந்தார்.
சிவகந்தனை கண்ட எழில்ரசன், அரியணையை விட்டு எழுந்து தன் வந்தனத்தை கூற, சிவகந்தனும் பதில் வணக்கத்தை கூறி மூவரும் அவரவர், அவரவர் ஆசனத்தில் அமர்ந்தனர்.

தொண்டையை கனைத்து கொண்டு அரம்பித்தார் தலைமை சிற்பி எழிலரசன், "வந்தியத்தேவரின் அன்பிற்கு பாத்திரமானவரே, தங்கள் என்னை சந்திக்கவேண்டிய நோக்கத்தை அறியலாமா?"
"கண்டிப்பாக எழிலரசன் அவர்களே, தங்கள் புதுப்பித்து கொண்டு இருக்கும் பொன் அரண்மனை பணியை நிறுத்திவிட வேண்டும், தச்சை நகரில் இருக்கும் மகான் குச்சரமல்லரை சந்திக்கவேண்டும், உங்களுக்கு மகத்தான பணி காத்து இருக்கிறது.."

சிவகந்தன் சொன்ன மறு கணமே, நெருப்பை மதித்து போல அரியனையை விட்டு துள்ளி எழுந்தான் எழிலரசன் கத்த அரம்பித்தான்.
"என்ன சொல்லுகிறர்கள் சிவகந்தன் அவர்களே, நம் வேந்தன் ராஜேந்திர சோழன் எனக்கு இட்ட கட்டளையை நிறுத்த சொல்கிறீர்களா? அவரது கட்டளையை தடுக்கும் அதிகாரம் இந்த சோழ தேசத்தில் யாருக்கு உண்டு?" என்று சொல்லி தனது சினத்தை வெளிப்படுத்த, புன்சிரிப்பை வெளிப்படுத்தி சிவகந்தன் பேச அரம்பித்தான்,

"என் சினம் அடைகிறீர்கள் எழில்ரசன் அவர்களே, இந்த உத்திரவை பிறப்பிட்டது எங்கள் தலைவர் வல்லவராயன் வந்தியத்தேவன்.. கட்டளை இட்டது.." என்று சொல்வதற்கு முன் இடைமறித்து,
"சிவகந்தன் அவர்களே!, நான் சினம் கொள்ளவில்லை, ஆச்சம் தான் அடைகிறேன், நமது மன்னரின் சினத்தை அறிவீர்கள் அல்லவா, அவரது சினத்தை எதிர்கொள்ளும் தைரியம் வையகத்தில் யாருக்கு உண்டு? ஏன் மறைந்த நமது மன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜ அருள்மொழி தேவருக்கே அந்த தைரியம் இல்லை, வல்லவராயன் வந்தியத்தேவர் மீது நமது மன்னர் அதிக அன்பு உடையவர் நமது மன்னர், ஆனால் அவரது ஆசைக்கு குறுக்கே யார் வந்தாலும் தகர்ப்பவர் என்பதை நீங்கள் அறீவீர்கள்?. நமது மன்னர் எனக்கு இட்ட கட்டளையை நான் மீறினால், நான் என்ன ஆவேன்?" என்று தன் அதங்கத்தை வெளிப்படுத்தினார்.

"நமது மன்னர் அதிக சினம் உடையவர், அவரது சினத்தை மட்டும் அல்ல, அவரை போல அதிகம் சினம் உடையவராக இருந்த நமது மன்னரின் பெரிய தந்தை ஆதித்ய கரிகாலன் சினத்தையே சமாளித்தவள் என் தாய் குந்தவைப்பிராட்டி, உங்களுக்கு தெரியுமா? இந்த பொன் அரண்மனையில் வாசம் செய்ய இராஜேந்திர சோழன் ஆசை படகாரணம், அவரது பெரியதந்தை ஆதித்ய கரிகாலன் கட்டிய இந்த அரண்மனையில் தான் அவரது தாத்தா அழகு வாயந்த சுந்திர சோழன் கடைசி காலம் முழுவதும் வாசம் செய்த இந்த அரண்மனையில் தானும் வசிக்க ஆசைபடுவதும் தெரியும். ஆனால் இந்த அரண்மனையில் இராஜேந்திர சோழன் ஒருகணம் செல்லக்கூடாது என்று கட்டளை பிறப்பித்து எங்கள் தாய் குந்தவைப்பிராட்டி, அவரது கட்டளைக்கு எதிர்ப்பு தெரிவிக்க நமது மன்னர் மட்டும் அல்ல, அவரது தந்தைக்கும் அதிகாரம் இல்லை என்பதை இந்த சோழ தேசத்துக்கே தெரியும், இக்கோட்டையில் புதுப்பிக்ககூடாது என்று கட்டளையிட்டது என் தாய், ஆணை பிறப்பித்து என் தலைவர் வந்தியத்தேவர்,"
[காஞ்சிபுரத்தில் அதித்ய கரிகாலன் தன் தந்தைக்கு கட்டிய அரண்மனையிலே வாசம் செய்து, சுந்திர சோழர் மரணத்தால் "பொன் மாளிகை துஞ்சின தேவன்" என மக்களால் அழைக்கப்பட்டார்.]
"தாய் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், ஆனால் எந்த காரணத்திற்காக நமது மன்னர் இந்த அரண்மனையில் தங்க கூடாது என்று என் சொன்னார்கள் என்பதை நான் அறிந்துகொள்ளலாமா சிவகந்தன் அவர்களே?"
"கண்டிப்பாக அறிந்து கொள்ளலாம், என் தாய் செய்யும் ஒவ்வொறு செயலிலும் ஒர் அர்த்தம் இருக்கும்!, இதிலும் ஒர் அர்த்தம் இருக்கிறது பொன் அரண்மனையில் தங்கினால் நமது மன்னர் இராஜேந்திர சோழனுக்கு அபத்து ஏற்படும் என ஆச்சம் அடைகிறார்,"
இதுவரை நடந்த விவாதத்தை அரியனையில் அமர்ந்து கவணித்து வந்த காஞ்சி படைதளபதி பழனிவேல் மாறன் தன் இரு புஜத்தை மடக்கி கொண்டு பேச அரம்பித்தார்," அய்யனே!, தங்கள் என் கூறுகிறர்கள், இந்த காஞ்சி நகரில் இருந்தால் நமது மன்னருக்கு அபத்தா? என்ன சொல்கிறர்கள், வேள்ளார்களும் பழுவூர்காரர்களும் இருபுறம் இருந்து காக்கும் இந்த கோட்டையில் தங்கினால் பகைவரால் அபத்து ஏற்படும் என எப்படி சொல்வீர்கள் அய்யனே?" என சிவகந்தனை நோக்கி மடை திறந்த வெள்ளம் போல பேச அரம்பித்தார்.
"காஞ்சி நகரில் எதிரிகள் வர முடியாத பாதுகாப்பான நகரம், தங்கள் காவலில் இருக்கும் போது என்ன கவலை, காஞ்சி நகரில் மன்னர் வசிப்பதில் என் தாய் எந்த தடையும் சொல்லவில்லை, பொன் அரண்மனையில் வாசம் செய்வதை தான் தடுத்து இருக்கிறார்கள்."

"என் என்று நமது தலைமை சிற்பிக்கே தெரியும்?" என்று சிவகந்தன் கூற,
"எனக்கு என்ன தெரியும் சிவகந்தா?"
"பொன் அரண்மனையில் வாசம் செய்பவர் யார் எழிலரசன் அவர்களே?"
"கடவுள் வாசம் செய்யும் இடம்."
"அப்படி என்றால், மனிதர்கள் பொன் அரண்மனையில் வசித்தால்?"
"அமரர்..." என பேசவந்ததை நிறுத்திகொண்டார் எழிலரசன்,
"நீங்கள் சொல்லவந்தீர்கள் அல்லவா, அந்த ஒரு காராணத்திற்காக தான் என் தாய் இந்த பொன் அரண்மனையில் வசிக்க அனுமதிக்கவில்லை, ஏற்கனவே தன் தமையன் இளவரசர் அதித்ய கரிகாலன் இளம் வயதிலே கொலை செய்ய காரணமாக இந்த அரண்மனையை கருதுகிறார், அவரது தந்தையும் இங்கு வசித்து மரணம் அடைந்தால், இந்த அரண்மனையில் வாசம் செய்ய ராஜராஜசோழனுக்கு மட்டும் அல்லாமல், தனது மருமகன் ராஜேந்திர சோழனுக்கும் கட்டளையிட்டு இருக்கிறார், அந்த செய்தியையும் சொல்லவே நான் மலேயா தீவிற்கு சொல்லுகிறேன்."

"பழனிவேல் ராஜன் அவர்களே, நான் சோழ தேசத்து அரசி பஞ்சவன்மாகதேவியை சந்திக்க சித்தமாக இருக்கிறேன், அவரிடம் சொல்லி விடுங்கள், நான் வந்த காரணத்தை, அவரிடம் இருந்தும் பொன் அரண்மனையில் நமது மன்னர் இராஜேந்திர சோழன் தங்க கூடாது என்று ஒலை சுவடி பெறவேண்டும், அவரது வார்த்தைகளுக்கு தான் ராஜேந்திர சோழன் செவி சாய்ப்பார், நான் இங்கு வந்த இரண்டாவது நோக்கும் இது தான், சிக்கிரமாக அவரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள், இன்று இரவு என் பயணத்தை அரம்பிக்கவேண்டும்."
யார் அந்த பஞ்சவன்மகாதேவி? சோழ தேசத்து குலதெய்வமாக கருதப்பட்ட குந்தவைப்பிராட்டிக்கு நிகராக ராஜேந்திர சோழன் அன்பிற்கு பாத்திரமான அந்த பெண் யார் என்பதை அடுத்த வாரம் காணலாம்,
 Panchavan Maadeviyar queen of Mummudichola…..(Rajaraja – 1)…
(அவரை பற்றிய ஒரு செய்தியை இங்கு சொல்கிறேன், இளம் வயதில் பஞ்சவன்மகாதேவி தாசியாக இருந்தார், இன்று ராஜராஜசோழனை மட்டும் அல்லாமல் ராஜேந்திரசோழன். தன் அன்பால் கட்டிபோட்ட அந்த பெண் பற்றிய தகவலை அடுத்த வாரம் அறியலாம்.)
இன்று நித்திரையில் சிவகந்தன் பயணம் தொடரும்...

ஞாயிறு, 11 மே, 2014

குந்தவை ராஜ்ஜியம் 4

குந்தவை ராஜ்ஜியம் 4

இதற்கு முந்தைய தொடரை காண இங்கே <<கிளக்>> செய்யுங்கள்...
பழனிவேல் மாறன் தன் மகனை எழில்ரசனை விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வர சொல்லிவிட்டு, சிவகந்தனை அழைத்துகொண்டு கோட்டையின் கிழக்கு பகுதியில் இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்றான் செல்லும் வழியில்


இரு அடுக்கு மிகப் பெரிய பரந்த சத்திரமாக காட்சி அளிக்கும், சுந்திர சோழர் வைத்தியசாலை நோக்கி நடக்க அரம்பித்தான் சிவகந்தன், அவரது தீடீர் விஜயத்தை கண்டு அங்கு உள்ள பணியாளர்களில் ஒருவன் தலைமை வைத்தியர் பாலகுமரன் பிள்ளைவாள் அழைத்து வர சென்றுவிட்டார். அங்கு உள்ள பணியாளர்கள் சிவகந்தனையும், பழனிவேல் மாறனையும், மரியாதையுடன் உள்ளே அழைத்து சென்று ஆசனத்தில் அமர வைத்தனர். சிவகந்தன் வருகையை அறிந்து விரைவாக வந்த தலைமை வைத்தியர் பாலகுமரன், "தங்கள் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அய்யனே, தங்கள் வரவு நல்வரவாகட்டும்,"
"மிக்க நன்றி" என்று கூறிவிட்டு சிறிய புன்னகை தலைமை வைத்தியரை நோக்கி உதிர்த்தார் சிவகந்தன்.
[வாசகர்களுக்கு ஒரு விஷயத்தை பகர்ந்துகொள்ள விரும்புகிறேன், சுந்திர சோழரின் ஆட்சி காலத்தில் தன் இளம் வயதிலே, அவரது மகள் குந்தவை பிராட்டி சோழதேச மக்கள் நோய் நொடியின்றி வாழ, சோழ தேசம் முழுவதும் வைத்தியசாலை நிறுவி தனது கட்டுபாட்டில் வைத்து இருந்தார், இதை அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த உத்தம சோழர் காலத்திலும், தனது தம்பி ராஜராஜசோழ காலத்திலும் அவரது மகன் காலத்திலும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது, பல அரிய வகை மூலிகை வெளி தேசத்தில் இருந்து சேகரித்து சோழ தேசத்து மக்கள் நலமுடன் வாழ பாடுபட்டார் என்பது கூறிப்பிடக்கது. இன்று வரை வரலாற்று அசிரியர்கள் பாராட்டும் ஒரே ஒரு சோழ இளவரசி குந்தவைபிராட்டி என்பது கூறிப்பிடக்கது.]
"அய்யனே, நமது இளவரசியின் உதவியால் இந்த வைத்திமசாலை அனைத்து வகையான மூலிகைகள் முதல் வைத்தியத்தில் கை வண்ணம் காட்டும் சேர தேசத்து வைத்தியர்கள் வரை நமது வைத்தியசாலையில் பணியாற்றுவது பெருமைக்கூரியது, தற்பொது இளவரசியின் உதவியால் இன்று சீனதேசத்து புதுவிதமான வைத்திய முறையும் கற்றும், செயல்படுத்தியும் வருகிறோம், தாங்கள் நாடினால் எங்களுக்கு மேலும் ஒரு புதிய வைத்தியமுறை கற்க முடியும். அதன் மூலம் இந்த காஞ்சி நகர மக்கள நோய் நொடி இன்றா வாழ முடியும் அய்யனே"

"வைத்தியரே தங்களுக்கு உதவி செய்ய கடமைபட்டு இருக்கிறேன், தங்கள் எந்த வைத்தியத்தை கற்க விரும்புகிறீர்கள்?" "சென்ற வாரம் மாமல்லபுரத்தில் அரபு தேசத்தில் இருந்து இரு வணிக கப்பல் வியாபாரம் செய்ய வந்துள்ளது, அதில் அரபுலகத்தில் தலை சிறந்த ஒரு வைத்தியரும் வந்துள்ளார், அவரிடம் சில அரபுலக வைத்தியத்தின் ரகசியங்களை கற்று கொண்டால் சிறப்பாக இருக்கும். அய்யனே தாங்கள் நினைத்தால் நடக்கும்,"

"வைத்தியரே, தாங்கள் அறீவீர்கள் என்று நினைக்கிறேன், இதே இந்த காஞ்சி நகரில் பிறந்த பல்லவ இளவரசன் சீனா சென்று, அங்கு உள்ள கொடிய நோயை அழித்து சீனர்களை காபாற்றினான் என்று சீன வணிகர்கள் பலர் கூறியதை நான் கேட்டு இருக்கிறேன், அந்த இளவரசனை போன்று பல திறமையான வைத்தியர்களும் சித்தர்களும் வாழ்ந்த பூமி இது, அவர்கள் நமக்கு விட்டு சென்ற வைத்திய குறிப்புகள் கொண்ட ஒலை சுவடிகளை தேடி கற்றாலே போதும், நம் மக்களை நோய் இன்றி வாழ வைக்கலாம் சோழ தேசத்தை வைத்தியரே."
தலைமை வைத்தியரால் பேச முடியவில்லை தலையை மட்டும் ஆட்டி கொண்டு ஒப்பு கொண்டார் மன வருத்துடன்,
இதை உணர்ந்த சிவகந்தன், "வைத்தியரே தங்களுக்காக பேசி பார்க்கிறேன் அரபு வைத்தியரிடம், ஆனால் அரபியர்கள் வலிமையானவர், மூர்க்கமானவர்கள் அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ங்கள், அதற்கான ஏற்பாட்டை செய்ய முயற்ச்சிக்கிறேன்."
இதை கேட்ட சந்தோசத்தில் தலைமை வைத்தியர் பாலகுமாரன் மகிழ்ச்சியுடன் "மிக்க நன்றி அய்யனே, தங்கள் உதவியை மறக்க மாட்டேன்".
அந்த நேரத்தில் புகழேந்தி வைத்தியசாலைக்கு நுழைந்து சிவகந்தனுக்கும், பழனிவேல்மாறனக்கும் பணிவான வணக்கம் செலுத்திய பின், "தளபதி அவர்களே, மாளிகையில் தலைமை சிற்பி எழிலரசன் அவர்கள் காத்து இருக்கிறார் என்ற தகவலை, உங்கள் மகன் மணிமாறன் சொல்லி அழைத்து வரசொன்னார்." ஆசனத்தில் இருந்து சிவகந்தனும், பழனிவேல்மாறனும் எழுந்து, மாடமாளிகையை நோக்கி செல்ல அரம்பித்தனர் வேகமாக.

பயணம் தொடரும்....

குந்தவை ராஜ்ஜியம் 5

திங்கள், 28 ஏப்ரல், 2014

குந்தவை ராஜ்ஜியம் 3

குந்தவை ராஜ்ஜியம் 3


இதற்கு முந்தைய தொடரை காண இங்கே <<கிளக்>> செய்யுங்கள்...

புரவியில் வருபவரை தொலைநோக்கியில் மூலம் அறிந்த மணிமாறன், அவரை வரவேற்கக கோட்டை வாயிலை நோக்கி விரைந்தை கண்ட புகழேந்தி,

"புரவியில் வருபவர் யார் மணிமாறா?"

"புயல் காற்றை போன்று வேகமாக புரவியில் வருபவரை அறியவில்லையா நீ?, வருபவர் வல்லவராய வந்திய தேவனின் அஸ்தான தளபதி சிவகந்தன் வருகிறார், நான் அவரை வரவேற்க்க கோட்டை வாயிலை தயார்படுத்திகறேன், நீ என் தந்தை அழைத்து வா  கோட்டை வாயிலுக்கு, சீக்கிரமா கிளம்பு புகழ்,"

கோட்டையை நோக்கி வேகமாக சிவகந்தன் விரைந்தான், அவனை வரவேற்க்க கோட்டை வாயிலில் வீரர்களும் இருபுறமும் அணிவகுத்து நிற்பதையும், அவர்களை தலைமை தாங்கும் விதமாக காஞ்சி படை தளபதி பழனிவேல் ராஜன் கம்பிரமாக நிற்பதை கண்டான் சிவகந்தன்.  கோட்டை வாயிலை நோக்கி தன் வெண்புரவியை செலுத்தினான் சிவகந்தன்.

வேகமாக செலுத்திய புரவியை  காஞ்சி படைதளபதி பழனிவேல் ராஜன் முன் தன் புரவியின் கடிவாளத்தை இழுக்க, அந்த அழகான வெண் புரவி, தன் இரு முன்னங் கால்களையும் வான் நோக்கி  சில நோடிகள் உதைத்து விட்டு பூமியை நோக்கி தன் கால் பதித்தது,

சிவகந்தனை வரவேற்கும் வகையில், இரு அணியாக நின்று கொண்டு இருந்த சோழ வீரர்கள், தங்கள் கேடயத்தையும்,  வேலையும் ஒங்கி தட்டி அதன் முலம் வந்த பலமான ஒசையை தாளமாக மாற்றி "சோழம், சோழம், சோழம்," என மூன்று முறை கூவி, உற்சாகமாக வரவேற்றனர்.

சோழ வீரர்களின் வரவேற்பை ஏற்று கொண்ட வகையில் தன் வலது கைகளை உயர்த்தி, தன் மார்பில் வைத்து சைகையால் அவர்கள் வரவேற்பை ஏற்று கொண்டதாக காட்டிவிட்டது, புரவிக்கு விட்டு ஒரே பாய்ச்சலாக கீழே குதித்து கீழே இறங்கினான்.

தன் முன் நின்ற சிவகந்தன் கரங்களை பற்றி, "மக்களின் வேந்தனாக இருக்கும் வந்தியதேவரின் நம்பிக்கை பாத்திரமானவரே, தங்கள் வருகை நல்வரவாகட்டும், அங்கு வந்திய தேவரும், எங்கள் தாய் குந்தவைபிராட்டியும் நலமா?"

"நீங்களே அறிந்தீர்பீர்களே பழனிவேல் ராஜன் அவர்களே, எனது தாய் ஆறு மாதங்களாக உடல் நலம் இன்றி தவிக்கிறார்கள், தற்பொழுது அவர்கள் உடல் நிலை..." என்று சொல்லி முடிப்பதற்குள் வார்த்தைகள் உடைந்து கண்களின் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது.
புன்கை தவிழும் முகத்தையும், கோபத்தையும் மட்டும் வெளிகாட்டி வந்த சிவகந்தனின் முகம், இன்று குழந்தை போல் கேவி கேவி அழுவதை கண்டு, ஒரு கணம் பழனிவேல் ராஜன் அரண்டு தான் போனார்.

"மண்ணித்து விடுங்கள் அய்யனே, தங்களுக்கு மட்டும் அல்ல,  சோழ தேசம் நமது குலதெய்வம் குந்தைவைபிராட்டியை உடல் நிலையை நினைத்து தான் கவலைபடுகிறது, அய்யா தங்கள் வருகையின் நோக்கத்தை அறிந்துகொள்ளலாமா?"

தன் கண்களின் இருந்து வரும் கண்ணீரை துடைத்து கொண்டு, "எனது தந்தை நமது மன்னர் ராஜேந்திர சோழரிடம் முக்கிய தகவலை சொல்லுவதற்காக என்னை அனுப்பி இருக்கிறார், நாளை மறுநாள் சீன தேசத்தை நோக்கி செல்லும் நமது வணிக கப்பலில் பயணித்து மலேயா தீவில் இருக்கும் இராஜேந்திர சோழரை சந்திக்க செல்லுகிறேன். என் பிராயனத்தை  தயார்படுத்தி கொள்ளவதற்காக இங்கு வந்துள்ளேன், அது மட்டும் அல்ல, உங்களிடம் ஒரு முக்கிய பொறுப்பை ஒப்படைக்க வந்துள்ளேன்."

இதை கேட்ட மணிமாறன், முளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அரம்பித்து, எப்படியாவது சிவகந்தன் முலமாக மலேயா(மலேசியா) தீவில் இருக்கும் சோழ படைகளுடன் இனைந்துகொள்ளும் வாய்பை நழுவ விடக்கூடாது என திட்டம் தீட்டிக் கொண்டான்.

"தங்கள் பிராயான களைப்பில் இருப்பீர்கள், வெயிலின் உஷ்னம் வேற அனலாக இருக்கிறது, தங்கள் தனிக்க மோர் அருந்துங்கள், உங்களுக்கு மதிய விருந்தை எனது வீட்டில் தயார்படுத்த சொல்லிவிட்டேன், தங்களுக்கு பிடித்த அசைவ விருந்தை ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டேன்."

சிவகந்தன் முன் பணிவுடன் மண் சட்டி நிறைய வெண் நிற பசு மோரை நீட்டிய மணிமாறனிடம் வாங்கி ஒரு மூச்சியில் முழுமையாக குடித்துவிட்டான், தன் தாகம் தனிந்த பின்.

"பழனிமாறன் அவர்களே என்னை மண்ணிக்க வேண்டுகிறேன், கடந்த அறு மாதங்களாக நான் ஆசைவ உணவுகளை உண்ணுவது இல்லை, தங்கள் விருந்தை என்னால் ஏற்று கொள்ள இயலாது, தங்கள் சாதராண உணவை ஏற்பாடு செய்யுங்கள்."

"அப்படியே ஆகத்தும், வருங்கள் அய்யனே, கோட்டைக்குள் செல்வோம், தங்கள் களைப்பு தீர சிறிது நேரம் ஒய்வு எடுத்துக்கொள்ங்கள், உங்கள் பயணம் லேசாக இருக்க உதவும்."

"ஆம், நீங்கள் சொல்வது சரி தான், என் புரவியும் களைப்பு தீரவேண்டும், அதற்கு தேவையான ஆகாரத்தை வழங்க ஏற்பாடு செய்யுங்கள், நாம் கோட்டைக்கு செல்வோம்"

கோட்டைக்குள் சிவகந்தன் நுழைந்த பொழுது கோட்டை மத்தியில் இருக்கும் ஆத்திய கரிகாலன்(அதித்தய கரிகாலன் சுந்திர சோழனின் முத்த மகன், இளவரசி குந்தவைபிராட்டிக்கும், ராஜராஜ சோழனுக்கும் அண்ணன் ஆவர், பாண்டிய அபத்துவிகளால் இளம் வயதிலே கொல்லப்பட்டார்.) கட்டிய பொன் அரண்மனைய சூரிய ஒளி பட்டு கண்களை கூசும் ஒளி சிவகந்தன் கண்களை தாக்கியது,
பொன்னியன் செல்வன் நாவலில் மணியன்  அதித்தய கரிகாலன் ஓவியம்..

இதைகண்ட பழனிவேல் ராஜன்,"என் அய்யனே. பார்த்தீரா, நமது மாமன்னர் ராஜேந்திர சோழர் நாடு திரும்பிய பின்பு இக்கோட்டையில் தான் வசிக்க போகிறார், தனது பெரிய தந்தை ஆத்திய கரிகாலன் ஆசையாக கட்டி வாழ்ந்த  இக்கோட்டையில் தான் வசிக்க போகிறார், இராஜேந்திர சோழன் அப்படிய அத்திய கரிகாலனின் மறுபிறவி என்றே கூறலாம், அவரிடம் இராஜராஜ சோழன் குணங்களை காணவே முடியாது." என்று பெருமையாக பழனிவேல் ராஜன் கூறி கர்வத்துடன் சிரித்தார்.

"ஹும்ம்ம், அத்திய கரிகாலன் கட்டிய அரண்மனைக்கும் தற்போதைய அரண்மனைக்கு பல மாற்றங்கள் இருக்கிறதே,  கோபுரங்கள் அழகாக வடிவமைக்கப்படுள்ளதே, இதை யார் புதுப்பித்தார்கள்?".


"வடிவமைத்தது வேறு யாரும் இல்லை, குச்சரமல்லரிடம் வலது கரமாக திகழந்த எழில்அரசன் தான். இதை வடிவமைத்தார்."
(உலகம் போற்றும் தச்சை பெரிய கோயிலை வடிவமைத்து கட்டியவர் தான்.  குச்சரமல்லர் என்பதை வாசகர்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..)

"சரி, எழில்ரசனை அழைத்து வாருங்கள், உங்கள் இருவருக்கும் என் தாய் குந்தைவைபிராட்டியிடம் இருந்து முக்கிய செய்தி கொண்டு வந்துள்ளேன். உங்கள் இருவரிடம் அத்தகவலை தெரிவிக்கவே, என் தொலைதூர பிராயாணத்தை பொருட்படுத்தாமல் இங்கு வந்தேன்."

பழனிவேல் ராஜனுக்கு சிறிய அதிர்ச்சி, சிவகந்தன் வரும் பொழுதே தமக்கு ஒரு செய்தி இருப்பதை தெரிவித்தும், அதை பொருட்படுத்தாமல் அவரை வரவேற்பதில் அவர் சொல்லவந்ததை செவி வழியில் கேட்காமல் விட்டதை என்னிய அதிர்ச்சியை வெளிகாட்டாமல், மணிமாறனிடம்,"சீக்கிரம் அழைத்து வா, தலைமை சிற்பி எழில்ரசனை பணிவுடன் அழைத்துவா, குந்தவைபிராட்டியிடம் இருந்து செய்தி வந்து இருப்பதை தெரிவித்து அழைத்துவா, சீக்கிரம்."
மணிமாறன் வேகமாக தலைமை சீற்பி இருக்கும் மாடமாளிகைக்கு விரைந்தான்.

[குந்தவைபிராட்டியிடம் இருந்து வந்திருக்கும் தகவல் கேட்டால் பழனிவேல் ராஜனும், எழில் அரசனும் அதிர்ச்சி அடைய போகிறார்கள், அப்படி என்ன செய்தி கொண்டு வந்து இருக்கிறார் சிவகந்தன், என்பதை ஏழு நாள் வரை காத்திருங்கள்.]

பயணம் தொடரும்...

திங்கள், 21 ஏப்ரல், 2014

குந்தவை ராஜ்ஜியம் 2

குந்தவை ராஜ்ஜியம் 2



இதன் முதல் தொடரை காண இங்கே <<கிளக்>> செய்யுங்கள்...

குடந்தையில் இருந்து நள்ளிரவில் இருந்து பயணத்தை தொடங்கிய சிவகந்தன், சுட்டு எரிக்கும் சூரியனின் உச்சியில் நிற்க பசி தாகத்தில் இருந்த சிவகந்தனுக்கு காஞ்சி கோட்டையில் உச்சியில் இருந்த புலி கொடியை கண்டதும் காஞ்சியை நோக்கி தன் புரவி(குதிரை)யை செலுத்த அரம்பித்துவிட்டான்.


"அதோ காஞ்சியின் கோட்டை, இங்கு ஒய்வு எடுத்துவிட்டு கடல் பயணத்திற்கு தேவையான பொருள்களை பெற்றுவிட்டு மாமல்லிபுரத்திற்கு  செல்வோம், இன்னும் இரண்டு திங்கள்(நாள்) தான் இருக்கிறது. மாமல்லிபுரத்தில்  இருந்து மலேயா(தற்போதைய) தீவிற்கு சோழ தேசத்து போர் கப்பலை பிடிக்க." என மனதில் சிந்தித்துகொண்டே தன் புரவியை செலுத்த அரம்பித்தான் சிவ கந்தன்.

[காஞ்சி நகரம் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம், பல்லவர்களின் தலைநகரமாக விளங்கிய இந்த நகரில் தான் சீனா சென்று சீனர்களின் மனதை வென்ற அவர்களின் இதயத்தில் கூடி இருக்கும் பல்லவ இளவரசர் போதி தர்மர் பிறந்தார்,

பல்லவர்களால் காஞ்சி நகரம் சிற்ப கலை சிறந்து விளங்கிய இந்த நகரம். இன்று சோழ தேசத்து முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கிவிட்டது.]

காஞ்சி நகரத்தின் கோட்டை வாசலில் உள்ள பார்வை கோபுரத்தில் இரு இளைஞர்கள் நின்று கொண்டு காவல் காத்து கொண்டு இருந்தனர்.

மலயுத்த வீரர்களை போன்று வலிமையான தேகத்துடன் அந்த இளம் இளைஞனுக்கு தற்போது தான் சிறியதாக அரும்பு மீசை முளைத்து இருந்து, காஞ்சி தேசத்து உப.சோனாதிபதி பழனிவேல் ராஜனின் மகன் தான் அந்த மணிமாறன்.

ஏதையே சிந்தித்தாவறே சோகமாக இருந்த மணிமாறனை பார்த்து அவனுடன் கோட்டை பாதுகாப்பில் இருந்த புகழேந்தி,
மணிமாறனை பார்த்து,
"என்ன மணி, ஏதையோ சிந்தித்து கொண்டு இருப்பது போல தெரிகிறது, உன் முகத்தில் பழைய பொலிவே இல்லையே, என் உடம்பு எதும் சரியில்லையா?"

"என் உடம்பு திடமாக வலிமையாக தானே இருக்கிறது புகழ், என் கவலை எல்லாம் மலேயா தீவில் இருக்கும் நம் சோழ தேசத்து வீரர்களை பற்றி தான்."

"ஹா ஹா ஹா" என பலமாக சிரித்த புகழ் " உன் பதில் என் வயிற்றை புண்ணாக்கிறது, நம் மன்னரும், நம் படையும் சாதராண படையா? இவ்வுலகத்தையே வெல்லும் அற்றல் நம் மன்னர் ராஜேந்திரனுக்கு இருக்கிறதை அறியவில்லை,"

"அய்யகோ, நான் அப்படி சொல்லவில்லை, நம் மன்னரும் நம் நாட்டு வீரர்களின் வீரமும் பற்றி பேசி கொண்டே இருக்கலாம், நம் மன்னர் இமயத்தில் இருந்து வரும் கங்கை நதி பாயும் வங்கம் வரை ராஜ்ஜியத்தை விரிவு படுத்திய மாவீரர் அல்லவா அவர்?"

"அப்ப என் சோகமா இருக்கிறாய் மணி"

"மலேயா தீவில் இருக்கும் நம் படையை நினைத்து தான்......" என்று மணிமாறன் வார்த்தையை முடிப்பதற்கு முன் புகழேந்தி கத்த அரம்பித்துவிட்டான்.

"மணி உனக்கு தான் நன்கு தெரியுமே நம் பரதர்களின் வலிமையை பற்றி, அங்கு தான் பாலகன் பருவத்தில் வளர்ந்தாய், மீன் பிடிப்பதை மறந்து வாள் பிடிக்க கற்று கொடுத்தவர் தானே, நம் மன்னர், வலிமையான ஈழத்தையும், கடாரத்தையும் வென்று விட்டார், சிறிய மலை தீவான மலேயா(சிங்கப்பூர் &மலேசியா) இன்னும் சில திங்களில்(நாளில்) சோழதேசத்துடன் இனைந்துவிடும், உனக்கு என்ன கவலை?."

அதுவரை அமைதியாக இருந்த மணிமாறனை, புகழேந்தியின் மீது தன் கோபத்தை வெளிகாட்டினார்.
"என்னை பேசவிடாமல், நீயே உன் கற்பனையில் நினைப்பதை பேசினால் என்ன அர்த்தம்?, என் சோகம் அது அல்ல, நான் நினைத்து என்னை பற்றி, உனக்கு ஒன்று தெரியுமா??. நம் மன்னர் ராஜேந்திரனுக்கு முன்பே,  மறைந்த நம்முடைய மாமன்னர் ராஜராஜசோழன் அருள் மொழிவர்மர் அவர்களே அன்றே செய்த ஏற்பாடால் தான். இன்று நம்முடைய மாமன்னர் ராஜேந்திரன் சோழனால் எளிதாக பல தேசங்களை வெல்ல முடிந்தது, மீன் பிடிக்கும் பரதர்களுக்கு வாளும், வேலும் பயிற்ச்சியை அன்றே அளித்துவிட்டார், பரதர்களுடன் சிறுவயதிலே வளர்ந்தது மட்டும் அல்ல, அவர்களுடன் சேர்ந்து எடுத்த பயிற்ச்சியின் விளைவு தான் என் வலிமையான தேகம் உருவாக காரணம்."

"சரி உன் கவலை தான் என்ன மணிமாறா? உன்னை பற்றி என்று சொன்னாயே, அப்படி என் கவலை?"
"புகழ், நீ நன்கு அறிவாய், நான் உருவாக்கிய வலிமையான தேகம், போர்களத்தில் எதிரிகளின் தலையை சாய்க்கவே, ஆனால் எனக்கு இன்னும் பதினேட்டு அகவை பூர்த்தியாகவில்லை என்ற காரணத்தால், என் தந்தை என் போர்களத்தில் அனுமதிக்கவில்லை, நம் மன்னரே இன்னும் இரண்டு வருடங்களில் கீழ்தேசத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் கைபற்றி நாடு திரும்பி ஆட்சி பொறுப்பில் ஈடுபட அரம்பித்துவிடுவார். அப்படி என்றால், தற்பொது மலேயா தீவில் இருக்கும் நம் படையுடன் நான் தற்போது இனைந்தால் மட்டுமே, என்னால் போர்களத்தில் ஈடுபட்டு எதிரிகளின் குருதி(இரத்தம்) சிந்த வைக்க முடியும், நான் எப்படி நம் மன்னர் படையுடன் இனைவது எப்படி கடல் கடந்து இருக்கும் அந்த தீவிற்கு செல்வது, என் தந்தையுடன் எப்படி சம்பந்தம் வாங்குவது என பல கவலைகளால் தான், நான் வாடி இருக்கிறேன் நண்பா,"


"கவலைபடாதே மணிமாறா!, உன் கவலையை போக்க ஆண்டவனே ஆள் அனுப்பாவார், உன் ஆசை நிறைவேறா."

"அப்படி நடந்தால், மகிழ்ச்சி, என் அவலும் லச்சியமும் அது தான் புகழ்."

புகழேந்தி மாலுமிகள் பயண்படுத்தும் தொலைநோக்கி முலம் தூரத்தில் இருந்து யாராவது வருகிறார்களா என கண்காணித்தான். அந்த நேரத்தில்.

"மணி மாறா, அங்கே பார், புழுதி புயல் உருவாக்கி கொண்டு வேகமாக ஒரு புரவி வருவதை பார், வருபவர் யார் என்று தெரிகிறதா உனக்கு?"

மணிமாறன் தொலைநோக்கியை வாங்கி தூரத்தில் வருபவரை நோக்கி பார்வையை செலுத்தியவன் முகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது, பகலவனை கண்டு பூக்கள் மலர்வது போல மலர அரம்பித்துவிட்டது மணிமாறன் முகம்,

"புகழ், என் லஞ்சியம் வீண் போகவில்லை, என் ஆசையை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கபோகிறது. அதே அந்த புரவியில் வருபவர் மூலமாய்" என்று சொல்லிக்கொண்டே பார்வை கோபுரத்தை விட்டு கீழே இறங்கி கோட்டை வாயில் நோக்கி விரைந்தான் மணிமாறன்.

[மணிமாறன் ஆசை நிறைவேறியதா இல்லையா?. புரவியில் வந்தவர் நிறைவேற்றுவார இல்லையா? என்பதை ஏழு திங்கள் வரை காத்திருங்கள்.,]

குந்தவை ராஜ்ஜியம் 3


ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

குந்தவை ராஜ்ஜியம் 1

குந்தவை ராஜ்ஜியம்.1.

குந்தவை ராஜ்ஜியம் நாவலை பற்றிய விளக்கம்...
குந்தவை ராஜ்ஜியம் நாவலை பற்றிய விளக்கம்...
மேல,இதை படித்த பின் கதைக்கு செல்வும்.....


எத்தனையோ பயணங்களை பயணித்து இருப்போம் நண்பர்களே, காலத்தை பின்நோக்கி செல்லும் டைம்மிசின் நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தை நோக்கி நாம் பயணிப்போம், குந்தவை ராஜ்ஜியம் என்ற நாவல் முலம் பயணிப்போம், வாருங்கள் நண்பர்களே,
time machine
உலகில் பழமையான மொழியான தமிழ் மொழி, ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்திய தேசம் மட்டும் அல்லாமல் கிழக்கு ஆசியா முழுவது தமிழ் ஆட்சிக்கு கீழ் இருந்த கால கட்டத்தை நோக்கி பயணிப்போம் வாருங்கள் நண்பர்களே. இன்றில்(கிபி2014) இருந்து சரியாக ஆயிரம் வருடங்களுக்கு முன் (கிபி1014)ல் தான் தமிழ் தேசம் மிகப்பெரிய கால மாற்றத்தை சந்தித்தது, ராஜராஜசோழன் மறைவுக்கு பிறகு ராஜேந்திர சோழன் அரியனை ஏறிய காலம், ஆனால் நாம் செல்லும் காலம் கிபி1020ல், சரியாக 994 வருடங்கள் பின்னோக்கி செல்லுவோம். குடந்தையில் இருந்து மாமல்லிபுரம் செல்லும் காஞ்சி மணற்சாலையில் புயல் வேகத்தில் வெண் புரவியைகுதிரை விரட்டி சென்றான் சிவகந்தன், சோழ தேசத்தில் காற்றை விட வேகமாக புரவியை செலுத்துவதில் சக்கிரவர்தியாக திகழ்ந்தான் என்று சோழ தேசமே செல்லும். வெண்நிற தோற்றத்தில் கம்பிரமான உடல் தேகமும், பார்ப்பவர்கள் இவரது அகவை நாற்பதிஆறு என்று சொன்னால் யாரும் நம்ம மாட்டார்கள், சிவப்பு நிற பட்டுவேட்டியும், இடுப்பில் பளபளப்பான வெள்ளி நிற உடைவாளும், அதன் அருகில் அரசரின் ஒலைசுவடியும், கழுத்தில் பெரிய சங்கலியும், கையில் மன்னரின் முத்திரை மோதிரமும். சிவப்பு நிற தலைப்பாவில் நடுவில் தங்கத்திலான புலியின் சின்னமும், இவரது உடையும், நடையும் பார்ப்பவர்களுக்கு இவர் தூதவர் என்றால் யாரும் நம்ம மாட்டார்கள். ஆனால் இன்று இரண்டாம் முறையாக சோழ மக்களின் நாயகனாக திகழ்ந்த வல்லவராயன் வந்திய தேவனிடம் இருந்து தூது செய்தியை மாமன்னர் ராஜேந்திரனிடம் கொண்டு செல்ல மலைகளின் தீவான மலேயா என்று அன்று அழைக்கப்பட்ட மலேசியா தீவை நோக்கி பயணிக்க மாமல்லிபுரத்தில் புறப்பட தயராக இருக்கும் சீனா செல்லும் சோழர்கள் கப்பலை பிடிக்க தான் வேகமாக புரவியை செலுத்துகிறான்.

சிவகந்தன் தூதவன், சோழ தேசத்து குலவிளக்கான குந்தவையின் ஆஸ்தான குடந்தை ஜோதிடர் சண்முக அய்யங்காரின் ஒரே மகனும், சோழ தேசத்து மக்களின் குலவிளக்கான குந்தவை பிராட்டியின் வளர்ப்பு கண்காணிக்கப்பட்டவர் தான் சிவகந்தன். தொடர்ந்து ஜந்து மணி நேரம் புரவியை செலுத்திய களைப்பால், புரவியின் வேகம் சுற்று குறைந்து கொண்டே வந்தது. தாகமும், பசியும் கண்களை சொக்கியது சிவகந்தனுக்கு, தூரத்தில் கோட்டையின் உச்சியில் இருக்கும் புலி கொடியை கண்டுவிட்ட சிவகந்தன். இன்னும் ஏழு கல் தொலைவு தான் இருக்கும் காஞ்சியை சென்று அடைய, என்று சொல்லிகொண்டே மீண்டும் தன் புரவியை காஞ்சியை நோக்கி செலுத்தினான்.
இன்னும் ஏழு (நாள்)கல்(ள்) தான். சிவகந்தனின் தூது கடல் கடந்த பயணம் தொடரும்...

இதன் இரண்டாம் தொடரை காண இங்கே <<கிளக்>> செய்யுங்கள்...

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

குந்தவை ராஜ்ஜியம் நாவலை பற்றிய விளக்கம்

குந்தவை ராஜ்ஜியம் நாவலை பற்றிய   விளக்கம் 

இந்த நாவலின் கதை களமாக சோழ தேசத்தில் இருந்து தூதவன் தன் மன்னருக்கு தூது செய்தி கொண்டும் செல்லும் பயணத்தில், அவனது நினைவுகள் கடந்த காலத்தில் ஒரு பெண்னின் வாழ்கையை நோக்கி பயணிப்பதாக எழுதி இருக்கிறேன்.
அந்த தூதவனின் பெயர் சிவகந்தன், இவன் சோழ தேசத்து மருமகன் வல்லத்து இளவரசன் வல்வராயனின் வந்திய தேவனின் நம்பிக்கைகூரிய ஒற்றன். மட்டும் அல்லாமல் வளர்ப்பு மகனாக வந்திய தேவர் குந்தவைபிராட்டிமின் தம்பதிக்கு இருந்தான்.
சிவகந்தன்..


சிவகந்தன் நினைவில் பயணித்த பெண், சோழ தேசத்து குலதெய்வமாக போற்றிய குந்தவைபிராட்டியார் தான், சுந்திர சோழின் ஒரே மகளான இவளது சகோதரன் தான் ராஜராஜ சோழன்.
ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் குந்தவையின் வளர்ப்பில் வளர்ந்தான் என்பது கூறிப்பிடக்கது.
சோழ தேசத்து அரசர்களை உருவாக்கும் பெண்ணாக மட்டும் இல்லாமல், சோழ தேசத்து மக்கள் வாழ்வில் கலந்தவள் அவர்களை நோய்களை போக்க எல்லா ஊருகளுலும் மருத்துவமனை உருவாக்கியவள், எல்லா மதங்களை பாதுகாப்பு அரணாக இருந்து மட்டும் அல்லாமல் வைணவம் புத்த மதங்களுக்கு கோயில் கட்டியவள். ராஜராஜசோழனின் நிர்வாகத்தை கண்காணித்தவள், அது மட்டும் அல்ல ராஜேந்திர சோழனை ராஜ கலை கற்று கொடுத்தவள்.
மொத்தில் பண்டைய இந்தியாவில் வலிமையான பெண்களில் ஒருவராக கருதபட்ட குந்தவைபிராட்டியாரை பற்றி வாழ்கை சம்பவங்களை சிவகந்தன் நினைவுகள் முலம் இந்த நாவலில் வெளிபடுத்த இருக்கிறேன்.
அந்த பெண்னின் ராஜ்ஜியமான குந்தவை ராஜ்ஜியமே இந்த நாவலின் தலைப்பாக வைக்கிறேன்..